என்னை ராசி இல்லாத நடிகை என்றனர் - நடிகை கீர்த்தி சுரேஷ்
|மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை கதையான 'நடிகையர் திலகம்' படத்தில் நடித்து கீர்த்தி சுரேஷ் தேசிய விருது பெற்றுள்ளார்.
சென்னை,
தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் பிரபல நடிகையாக திகழ்ந்து வருபவர் கீர்த்தி சுரேஷ். மலையாள படத்தில் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் 'இது என்ன மாயம்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது இந்தி படத்திலும் நடித்து வருகிறார். மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை கதையான 'நடிகையர் திலகம்' படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார்.
இந்தநிலையில், சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கீர்த்தி சுரேஷ், "ஒரு மலையாள படத்தில் நடிக்கத்தான் எனக்கு முதல் வாய்ப்பு வந்தது. நானும் அம்மா மாதிரி நடிகையாக போகிறேன் என்ற மகிழ்ச்சியோடு சென்றேன். ஆனால் அந்த படம் நின்று விட்டது. அதன்பிறகு இன்னும் இரண்டு புதிய படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டேன். அந்த படங்களும் இடையிலேயே நின்று விட்டன.
இதனால் என்னை ராசியில்லாத நடிகை என்று எல்லோரும் சொன்னார்கள். நான் முயற்சியை கைவிடவில்லை. மெல்ல மெல்ல என்னை மெருகேற்றி தொடர்ந்து படங்களில் நடித்து தேசிய விருது பெற்றேன். இப்போது நிறைய நல்ல படங்களில் நடித்து பெயர் வாங்கி இருந்தாலும் ஆரம்ப காலத்தில் எதிர்கொண்ட விமர்சனங்கள் எனக்கு அடிக்கடி நினைவுக்கு வந்து வேதனைப்படுத்துகின்றன" என்றார்.