< Back
சினிமா செய்திகள்
There is no language barrier in my head anymore:Raashii Khanna

image courtscy:instagram@raashiikhanna

சினிமா செய்திகள்

'இனிமேல் அதனால் எனக்கு தடை இல்லை ' - நடிகை ராஷி கன்னா

தினத்தந்தி
|
1 Jun 2024 8:11 PM IST

இப்போது என்னால், தமிழ், தெலுங்கு மொழிகளைப் புரிந்துகொண்டு பேச முடியும் என்று நடிகை ராஷி கன்னா கூறினார்.

மும்பை,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷி கன்னா. தற்போது தமிழில் சுந்தர். சி இயக்கத்தில் ராஷி கன்னா நடித்த படம் அரண்மனை 4. இப்படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. நேற்று இந்தப் படம் இந்தியில் வெளியானது.

அப்போது நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராஷி கன்னா பேசும்போது, ''தமிழில் இதற்கு முன் நான் நடித்த 2 படங்கள் வெற்றி பெற்றன. 'அரண்மனை 4' படமும் வெற்றி பெற்றுள்ளதால் இது எனக்கு ஹாட்ரிக் வெற்றி என்று ரசிகர்கள் சொல்கிறார்கள்.

சிறுவயதில் இருந்தே ஹாரர் படங்கள் பிடிக்கும் என்பதால் 'அரண்மனை 4' படத்தில் நடித்தது பெருமையாக இருந்தது. இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வருகிறேன்.

மொழி புரிந்தால் பார்வையாளர்களுடன் நெருங்க முடியும் என்பது எனக்குத் தெரியும். என்னால், இப்போது தமிழ், தெலுங்கு மொழிகளைப் புரிந்துகொண்டு பேச முடியும். இதனால் இனி மொழி எனக்கு தடையில்லை. சில படங்கள் திரையரங்குகளில் சரியான வரவேற்பைப் பெறாவிட்டாலும் இந்தப் பயணத்தில் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன், இவ்வாறு கூறினார்.

மேலும் செய்திகள்