< Back
சினிமா செய்திகள்
There is no greater happiness than that - Nivetha Thomas shares about the character she is playing
சினிமா செய்திகள்

'ஒரு நடிகைக்கு அதைவிட பெரிய மகிழ்ச்சி வேறு எதுவும் இல்லை' - நிவேதா தாமஸ்

தினத்தந்தி
|
1 Sept 2024 5:55 PM IST

தற்போது, நிவேதா தாமஸ் நடித்துள்ள படம் '35 - சின்ன கதை காடு'.

சென்னை,

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் நிவேதா தாமஸ். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான 'ஜில்லா' படத்தில் நடித்து பிரபலமானார். அதனைத்தொடர்ந்து கமல்ஹாசனுடன் 'பாபநாசம்' மற்றும் ரஜினியுடன் 'தர்பார்' படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது, நிவேதா தாமஸ் நடித்துள்ள படம் '35 சின்ன கதை காடு'. இப்படம் கடந்த சுதந்திர தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அன்றைய தினம் பல படங்கள் வெளியான காரணத்தினால் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.

அதனைத்தொடர்ந்து, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வரும் 6-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இப்படத்தின் புரொமோஷனின்போது நிவேதா தாமஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

''35-சின்ன கதை காடு' ஒரு எளிமையான வசீகரமான கதை. நான் சரஸ்வதி என்ற கதாபாத்திரத்தில் ஹோம்மேக்கராக நடித்திருக்கிறேன். இல்லத்தரசி கதாபாத்திரத்தில் நடிப்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஒரு நடிகராக நான் அனைத்து கதாபாத்திரங்களிலும் நடிப்பேன் என்று எதிர்பார்க்கிறேன்.

படத்தைப் பார்த்த பிறகு, நான் அம்மாவை விட சரஸ்வதியாக ஒரு அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தினேன் என்று நீங்கள் அனைவரும் நினைத்தால் நான் மகிழ்ச்சியடைவேன். நிவேதா எந்த வேடத்திலும் நடிப்பார் என்று இயக்குனர்கள் நம்புவதை விட ஒரு நடிகைக்கு பெரிய மகிழ்ச்சி வேறு எதுவும் இல்லை, என்றார்.

மேலும் செய்திகள்