< Back
சினிமா செய்திகள்
Therapy due to multiple rejections - Nora fatehi
சினிமா செய்திகள்

'பலமுறை நிராகரிக்கப்பட்டதால் சிகிச்சை' - வெளிப்படையாக பேசிய பிரபல நடிகை

தினத்தந்தி
|
3 Nov 2024 9:07 AM IST

கனடாவில் பிறந்து வளர்ந்தவர் நடிகை நோரா பதேகி.

மும்பை,

கனடாவில் பிறந்து வளர்ந்தவர் நோரா பதேகி. இவர் கடந்த 2014ம் ஆண்டு வெளியான ரோர்- டைகர்ஸ் ஆப் தி சுந்தர்பான்ஸ் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடினார்.

வம்சி பைடிபல்லி இயக்கத்தில் கார்த்தி நடித்த தோழா படத்தில் டோர் நம்பர் பாடலுக்கு குத்தாட்டம் போட்டவர் நோராபதேகி தான். தற்போது அவர் பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். பெரும்பாலும் குத்துப் பாடல்களுக்கு ஆடி வருகிறார்.

இந்நிலையில் நோரா பதேகி, பலமுறை பாலிவுட்டில் நிராகரிக்கப்பட்டதால் சிகிச்சையை நாடியதாக கூறினார். இது குறித்து அவர் கூறுகையில், ' நான் இந்தியாவுக்கு வந்த புதியதில், பலரை நம்பினேன். அவர்கள் எனக்காக கடவுள் அனுப்பியவர்கள் என பலரை முட்டாளதனமாக நம்பினேன். அப்போதுதான், யாரும் எதையும் இலவசமாக செய்வதில்லை என்பதை உணர்ந்தேன்.

பாலிவுட் சினிமாவில் பல ஆடிசனில் நிராகரிக்கப்பட்டேன். நடிகையாக என்னிடம் போதுமான திறன் இல்லை என்றும் பலர் என்னிடம் அடுத்த கத்ரீனா கைப் ஆக விரும்புகிறீர்களா? என்றும் சொன்னார்கள். இது என் மனதை மிகவும் பாதித்தது. இதனால், அதற்கான சிகிச்சையை நாடினேன்' என்றார்.

மேலும் செய்திகள்