< Back
சினிமா செய்திகள்
Theater owners association demands for Amaran film crew
சினிமா செய்திகள்

'அமரன்' படக்குழுவுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை

தினத்தந்தி
|
13 Nov 2024 3:16 PM IST

அமரன் படத்தின் ஓ.டி.டி ரிலீஸை தள்ளிவைக்க திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

சென்னை,

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் தீபாவளி பண்டிகையில் வெளியான படம் 'அமரன்'. மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் உலகளவில் சுமார் 900-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி இதுவரை ரூ.250 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.

இதனையடுத்து இப்படம், வருகிற டிசம்பர் மாதம் முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரத்தில் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில், அமரன் படத்தின் ஓடிடி ரிலீஸை தள்ளிவைக்க திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

அதன்படி, 'அமரன்' திரைப்படம் அனைத்துத் திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதை கருத்தில் கொண்டு படம் வெளியான 8 வாரங்கள் கழித்து ஓ.டி.டியில் வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்