< Back
சினிமா செய்திகள்
The villain of the film Kill will make his Malayalam debut through Mohanlals film?
சினிமா செய்திகள்

மோகன்லால் படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகர்?

தினத்தந்தி
|
30 Oct 2024 4:15 PM IST

மோகன்லால், இயக்குனர் பிஷ்ணு விஸ்வநாத் இயக்கத்தில் தனது அடுத்த படத்தில் நடிக்க உள்ளார்.

சென்னை,

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் 'மலைக்கோட்டை வாலிபன்'. லிஜொ ஜோஸ் பெல்லிசேரி இயக்கிய இப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்த்த அளவில் வரவேற்பை பெறவில்லை. இதனையடுத்து மோகன்லால், 'எல்2 எம்புரான்', 'பரோஸ்' மற்றும் 'எல் 360' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இப்படங்களையடுத்து மோகன்லால், இயக்குனர் பிஷ்ணு விஸ்வநாத் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு ஆதர்ஷ் சுகுமாரன் திரைக்கதை எழுதுகிறார். இந்நிலையில், பாலிவுட் நடிகர் ஒருவர் இப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு வெளியான 'கில்' படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தவர் ராகவ் ஜுயல். தற்போது இவர், மோகன்லால் நடிக்க உள்ள இப்படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் மலையாளத்தில் அறிமுகமாகும் படமாக இது அவருக்கு அமையும்.

மேலும் செய்திகள்