< Back
சினிமா செய்திகள்
The Viduthalai 2 film crew met Ilayaraja
சினிமா செய்திகள்

இளையராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்ற 'விடுதலை 2' படக்குழு

தினத்தந்தி
|
23 Dec 2024 12:39 PM IST

இளையராஜாவை சந்தித்து விடுதலை 2 படக்குழுவினர் வாழ்த்து பெற்றுள்ளனர்.

சென்னை,

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான 'விடுதலை' படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. இதில் பிரகாஷ்ராஜ், சேத்தன், மூணார் ரமேஷ், பவானிஶ்ரீ, இளவரசு, பாலாஜி சக்திவேல், மஞ்சுவாரியர், கிஷோர், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கடந்த 20ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில், இளையராஜாவை சந்தித்து விடுதலை 2 படக்குழுவினர் வாழ்த்து பெற்றுள்ளனர்.

அதன்படி, இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்தது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

மேலும் செய்திகள்