'தருணம்' படத்தின் டிரெய்லர் வெளியானது
|‘தருணம்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 14 ம் தேதி வெளியாகவுள்ளது.
சென்னை,
'தேஜாவு' படத்தின் இயக்குனர் அரவிந்த் பஸ்ரீநிவாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'தருணம்'. கிஷன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்மிருதி வெங்கட் நடித்துள்ளார். ஜென் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் தயாரிக்கும் இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் பால சரவணன், ராஜ் அய்யப்பன், கீதா கைலாசம், ஸ்ரீஜா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜா பட்டார்ஜி ஒளிப்பதிவாளராகவும், அருள் சித்தார்த் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ள இப்படத்திற்க்கு தர்புகா சிவா பாடல்களுக்கான இசையும், அஸ்வின் ஹேமந்த் பிண்ணனி இசையும் மேற்கொண்டுள்ளனர்.
இத்திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 14 ம் தேதி வெளியாகவுள்ளது. அதனை தொடர்ந்து இப்படத்தின் 'என்னை நீங்காதே நீ' என்ற பாடல் வெளியானது. இப்பாடலை மதன் கார்கி வரிகளில் கபில் கபிலன் மற்றும் பவித்ரா சாரி இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.