'முரா' படத்தின் டிரெய்லர் வெளியானது
|திருவனந்தபுரத்தை மையமாக வைத்து ஆக்சன் திரைப்படமாக இப்படம் உருவாகி உள்ளது.
சென்னை,
மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் சுராஜ் வெஞ்சரமூடு. இவர் தற்பொழுது சீயான் விக்ரம் நடித்துள்ள 'வீர தீர சூரன்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதுவே இவர் நடிக்கும் முதல் தமிழ் திரைப்படமாகும். இவர் தற்போது முஹம்மது முஸ்தபா இயக்கியுள்ள 'முரா' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் கனி கஸ்தூரி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். எச்ஆர் பிக்சர்ஸின் கீழ் ரியா ஷிபு தயாரித்த இப்படத்தின் திரைக்கதையை சுரேஷ் பாபு எழுதியுள்ளார். மிதுன் முகுந்தன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
திருவனந்தபுரத்தை மையமாக வைத்து ஆக்சன் திரைப்படமாக இப்படம் உருவாகி உள்ளது. முராவில் மாலா பார்வதி, கனி குஸ்ருதி, கண்ணன் நாயர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இந்தநிலையில் தற்போது இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் டிரெய்லரை நடிகர் விஜய் சேதுபதி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.