< Back
சினிமா செய்திகள்
அபிஷேக் பச்சன் நடித்த பி ஹேப்பி படத்தின் டிரெய்லர் வெளியானது
சினிமா செய்திகள்

அபிஷேக் பச்சன் நடித்த 'பி ஹேப்பி' படத்தின் டிரெய்லர் வெளியானது

தினத்தந்தி
|
4 March 2025 8:11 AM IST

தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான பிணைப்பை காட்டும் வகையில் 'பி ஹேப்பி' படம் உருவாக்கப்பட்டுள்ளது.

மும்பை,

அபிஷேக் பச்சன் பிரபல பாலிவுட் நடிகரும் திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். இவர் ரெப்யூஜி (2000) என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து "தூம், யுவா, சர்கார், குரு" போன்ற படங்களில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தற்போது அபிஷேக் பச்சன் 'பி ஹேப்பி' என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை லிசெல் ரெமோ டிசோசா தயாரித்துள்ளார்.

இந்த படம் "நாட்டின் மிகப்பெரிய நடன ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று கனவுடன் இருக்கும் மகளின் கணவை நிறைவேற்றும் தந்தையின் கதையை அடிப்படையாக கொண்டது. இந்த படம் ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான பிணைப்பை" காட்டும் வகையில் உருவாகி உள்ளது.

இந்த படத்தில் தந்தையாக அபிஷேக் பச்சனும், மகளாக வர்மாவும் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. அதனைத் தொடர்ந்து தற்போது டிரெய்லர் வெளியாகி உள்ளது. இப்படம் வருகிற 14-ந் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

மேலும் செய்திகள்