< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் டீசர் வெளியானது
|18 Nov 2024 10:39 AM IST
நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது புதிய திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது.
சென்னை,
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. சமீபத்தில், அட்லீ இயக்கத்தில் வெளியான 'ஜவான்' படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார்.
நயன்தாரா இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவரது புதிய திரைப்படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு 'ராக்காயி' என பெயரிடப்பட்டுள்ளது.
மேலும், இப்படத்தை செந்தில் நல்லசாமி இயக்க கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகும் இப்படத்தை டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன் மற்றும் மூவிவெர்ஸ் இந்தியா தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.