< Back
சினிமா செய்திகள்
The Teaser of Vaa Vaathiyaar has been released
சினிமா செய்திகள்

'வா வாத்தியார்' படத்தின் டீசர் வெளியானது

தினத்தந்தி
|
13 Nov 2024 5:28 PM IST

'வா வாத்தியார்' படத்தில் நடிகர் கார்த்தி, எம்.ஜி.ஆர் ரசிகனாக நடிக்கிறார்.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'மெய்யழகன்'. இப்படத்தை இயக்குனர் பிரேம் குமார் இயக்கி இருந்தார். அதனைத்தொடர்ந்து, பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சர்தார் 2 திரைப்படத்திலும் கார்த்தி நடித்து வருகிறார்

அதுமட்டுமில்லாமல், நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி தனது 26வது படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்திற்கு 'வா வாத்தியார்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர் கார்த்தி எம்.ஜி.ஆர் ரசிகனாக நடிக்கிறார். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

சத்யராஜ், ராஜ் கிரண் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக தெரிகிறது. இந்தநிலையில், 'வா வாத்தியார்' படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்