< Back
சினிமா செய்திகள்
படப்பிடிப்பு புகைப்படங்களை பகிர்ந்த தங்கலான் படக்குழு
சினிமா செய்திகள்

படப்பிடிப்பு புகைப்படங்களை பகிர்ந்த தங்கலான் படக்குழு

தினத்தந்தி
|
20 Aug 2024 9:10 PM IST

தங்கலான் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன

சென்னை,

பா ரஞ்சித் இயக்கியிருக்கும் தங்கலான் படத்தில் விக்ரம் , பார்வதி திருவொத்து , மாளவிகா மோகனன் , பசுபதி டேனியல் கேல்டகிரோன் , ஆனந்த் சாமி , ஹரி கிருஷ்ணன் , உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. கடந்த 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.பா.ரஞ்சித்துடன் இணைந்து ஜி.வி.பிரகாஷ் பணியாற்றுவது இதுவே முதல் முறை.

இப்படம் வெளியான 4 நாட்களில் ரூ.54 கோடி வசூலித்தது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

மேலும் செய்திகள்