புதிய போஸ்டர்களை வெளியிட்ட 'மாரீசன்' படக்குழு
|நடிகர் வடிவேலுவும், பகத் பாசிலும் 'மாரீசன்' படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.
சென்னை,
'மாமன்னன்' படத்துக்குப் பிறகு நடிகர் வடிவேலுவும், பகத் பாசிலும் புதிய படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். சுதீஷ் சங்கர் இயக்கும் இந்த படத்துக்கு 'மாரீசன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இதையடுத்து 'மாரீசன்' படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது. 'மாமன்னன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு வடிவேலுவுடன் இணைந்து பகத் பாசில் நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து 'மாரீசன்' படக்குழு புதிய போஸ்டர்களை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.