< Back
சினிமா செய்திகள்
வீர தீர சூரன் 2 படத்தின் படப்பிடிப்பு வீடியோ வெளியானது
சினிமா செய்திகள்

'வீர தீர சூரன் 2' படத்தின் படப்பிடிப்பு வீடியோ வெளியானது

தினத்தந்தி
|
26 Feb 2025 5:09 PM IST

கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்துள்ள 'வீர தீர சூரன் 2' படம் மார்ச் 27-ந் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

'சேதுபதி, சித்தா' படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் நடிகர் விக்ரம் தனது 62 - வது படமான 'வீர தீர சூரன் 2' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளதை படக்குழு உறுதி செய்துள்ளது. முதலில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. இப்படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு, முதல் பாகம் உருவாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

இப்படத்தில் நடிகர் விக்ரம் கிராமிய தோற்றத்தில் 'காளி' என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எஸ்.ஜே சூர்யா காவல் அதிகாரியாக நடித்துள்ளார். படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தென்காசி, மதுரை போன்ற பகுதிகள் நடைபெற்றது. படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், சமீபத்தில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி இப்படம் வருகிற மார்ச் மாதம் 27-ந் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில், இயக்குனர் அருண்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு 'வீர தீர சூரன் 2' படத்தின் படப்பிடிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்