'ஹிட் 3' படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்
|நானி நடிக்கும் 'ஹிட் 3' படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது.
ஐதராபாத்,
தெலுங்கு திரையுலகில் முன்னணி இளம் நடிகராக வலம் வருபவர் நானி. இவர் அடுத்தடுத்து புதுப்புது கதை அம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகிறார். சமீபத்தில், இவர் நடிப்பில் வெளியான படம் 'சூர்யாவின் சனிக்கிழமை'. பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்திருந்த இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தை தொடர்ந்து நானி, 'கோர்ட்' மற்றும் 'ஹிட் 3' ஆகிய 2 படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதில் ஹிட் 3 படத்தை பிரபல இயக்குனர் சைலேஷ் கொலானு இயக்குகிறார். யுனானிமஸ் புரொடக்சன் எனும் நிறுவனத்துடன் இணைந்து வால்போஸ்டர் சினிமா நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படம் ஒரு கிரைம் திரில்லர் ஜானரில் தயாராகிறது.
மிக்கி ஜே .மேயர் இசையமைக்கும் இப்படத்தின் புரோமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலானது. இதில், நானியின் தோற்றம் பாராட்டை பெற்றது. இந்நிலையில், ஹிட் 3 படத்தின் படப்பிடிப்பு இன்று ஐதராபாத்தில் துவங்கி இருக்கிறது. இதில், நானி மற்றும் சிலரின் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. இப்படம் அடுத்த ஆண்டு மே மாதம் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.