< Back
சினிமா செய்திகள்
The Raja Saab: THIS actress joins Prabhas venture with Maruthi
சினிமா செய்திகள்

பிரபாஸுடன் இணைந்த சிம்பு பட நடிகை

தினத்தந்தி
|
18 Aug 2024 7:55 AM IST

சமீபத்தில் நடிகை மாளவிகா மோகனன் 'தி ராஜா சாப்' படத்தில் இணைந்தார்.

சென்னை,

தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருந்துவந்த பிரபாஸ், பாகுபலி படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். அதனைத்தொடர்ந்து இவர் நடிக்கும் அனைத்து திரைப்படங்களும் இந்திய அளவில் வெளியாகின்றன. சமீபத்தில், பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகிய 'கல்கி 2898 ஏ.டி' திரைப்படம் ரூ.1,050 கோடிக்கும் மேல் கடந்து வசூல் சாதனை செய்தது.

இதற்கு அடுத்ததாக, மாருதி இயக்கத்தில் ஹாரர் காமெடி கதைக்களத்தில் உருவாகும் 'தி ராஜா சாப்' படத்தில் நடிக்க பிரபாஸ் ஒப்பந்தமாகி இருக்கிறார். தமன் இசையமைக்கும் இப்படத்தில் சமீபத்தில் நடிகை மாளவிகா மோகனன் இணைந்தார்.

இந்நிலையில், இப்படத்தில் மற்றொரு நடிகையாக சிம்பு நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான 'ஈஸ்வரன்' படத்தில் கதாநாயகியாக நடித்த நிதி அகர்வால் இணைந்துள்ளார். நேற்று நிதி அகர்வால் தனது பிறந்தநாளை 'தி ராஜா சாப்' படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

இது தொடர்பான புகைப்படங்களை படக்குழு பகிர்ந்து இதனை தெரிவித்துள்ளது. மேலும், இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்