< Back
சினிமா செய்திகள்
The next update of Thug Life is coming on Kamal Haasans birthday!
சினிமா செய்திகள்

கமல்ஹாசனின் பிறந்தநாளில் வரும் 'தக் லைப்' படத்தின் அடுத்த அப்டேட்!

தினத்தந்தி
|
5 Nov 2024 12:02 PM IST

'தக் லைப்' படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அடுத்த அப்டேட் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சென்னை,

36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'தக் லைப்'. இப்படத்தில் திரிஷா, சிம்பு, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார்.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதனை படக்குழு வீடியோ வெளியிட்டு தெரிவித்திருந்தது. இதனையடுத்து இப்படம் எப்போது திரைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில், படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அடுத்த அப்டேட் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் 7-ம் தேதி கமல்ஹாசன் தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு 'தக் லைப்' படக்குழு படத்தின் அடுத்த அப்டேட்டை அன்று காலை 11 மணிக்கு வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்