இன்று மாலை வெளியாகிறது 'விடாமுயற்சி' பட புதிய அப்டேட்..?
|இன்று மாலை 'விடாமுயற்சி' படத்தின் புதிய அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை,
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். மகிழ்த்திருமேனி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 'விடாமுயற்சி' வெளியாகிறது. சமீபத்தில் அஜர்பைஜானில் நடந்துவந்த 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக படக்குழு தெரிவித்தது. அதனைத்தொடர்ந்து, இப்படத்தின் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி வைரலாகி வருகின்றன.
கடந்த வாரம் அஜித்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது. தொடர்ந்து நடிகர் அர்ஜுனின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும், அடுத்ததாக நடிகர் ஆரவ்வின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் இன்று மாலை 7.21 மணிக்கு 'விடாமுயற்சி' பட அப்டேட் வெளியாகும் என்று நடிகர் அஜித்தின் மேலாளர் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதனை நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
7.21 pm
— Suresh Chandra (@SureshChandraa) August 11, 2024