'ஜீப்ரா' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது
|பிரியா பவானி சங்கர், டிமான்ட்டி காலனி 2 படத்தின் வெற்றியைத்தொடர்ந்து ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் 'ஜீப்ரா' படத்தில் நடித்து வருகிறார்.
சென்னை,
நடிகை பிரியா பவானி சங்கர், டிமான்ட்டி காலனி 2 படத்தின் வெற்றியைத்தொடர்ந்து, ஜீவா நடிக்கும் பிளாக் படத்திலும், ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் 'ஜீப்ரா' படத்திலும் நடித்து வருகிறார். இந்த சூழலில், 'ஜீப்ரா' படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.
இப்படத்தில், சத்யராஜ், பிரியா பவானி சங்கர், சுனில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிறைவடைந்ததையடுத்து படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைப்பெற்று வருகின்றன.
நிதிக்குற்றத்தைப் பற்றி பேசும் பான் இந்தியா படமாக உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் அடுத்த மாதம் 31ம் தேதி தீபாவளியன்று வெளியாகவுள்ளது. விரைவில், பிரியா பவானி சங்கர் நடிக்கும் மற்றொரு படமான 'பிளாக்' திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.