< Back
சினிமா செய்திகள்
The Moon Is Anger - Soon to be the first single Golden Sparrow
சினிமா செய்திகள்

'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' - விரைவில் முதல் சிங்கிள் 'கோல்டன் ஸ்பாரோ'

தினத்தந்தி
|
26 Aug 2024 7:43 AM IST

பிரியங்கா மோகனின் போஸ்டர் வெளியிட்டு நன்றி தெரிவித்த தனுஷ்

சென்னை,

ராயன் படம் கடந்த மாதம் 26ம் தேதி வெளியாகி வெற்றி நடை போட்ட நிலையில் ஓ.டி.டி.யிலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதே சமயம் தனுஷ் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்'.

இந்த படத்தின் மூலம் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் இந்தப் படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

படத்தின் முதல் பாடலுக்கான பைனல் மிக்சிங் முடிவடைந்திருக்கிறது. இந்நிலையில், நடிகர் தனுஷ் முதல் சிங்கிளான 'கோல்டன் ஸ்பாரோ' விரைவில் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார். இது குறித்து நடிகை பிரியங்கா மோகன் இருக்கும் போஸ்டரை வெளியிட்டு, கேமியோ ரோலில் நடித்ததற்கு தனுஷ் நன்றியும் தெரிவித்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.


மேலும் செய்திகள்