< Back
சினிமா செய்திகள்
The Jurassic World crew announced the title with the first look of the cast
சினிமா செய்திகள்

நடிகர்களின் முதல் தோற்றத்துடன் தலைப்பை அறிவித்த ஜுராசிக் வேர்ல்ட் படக்குழு

தினத்தந்தி
|
30 Aug 2024 10:59 AM IST

இப்படத்தை காட்ஜில்லா, ராக் ஆன், தி கிரியேட்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய கரேத் எட்வர்ட்ஸ் இயக்குகிறார்.

வாஷிங்டன்,

பிரபல ஹாலிவுட் இயக்குனரும், எழுத்தாளருமானவர் டேவிட் கோப். இவர் கடந்த 1993-ம் ஆண்டு வெளியாகி உலகளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற "ஜுராசிக் பார்க்" மற்றும் அதன் தொடர்ச்சியாக 1997-ம் ஆண்டு வெளியான "ஜுராசிக் பார்க்: தி லாஸ்ட் வேர்ல்ட்" ஆகிய படங்களில் எழுத்தாளராக பணிபுரிந்திருக்கிறார்.

தற்போது இவர் 'ஜுராசிக் வேர்ல்ட் 4' படத்திற்கு கதை எழுதியுள்ளார். இப்படத்தை காட்ஜில்லா, ராக் ஆன், தி கிரியேட்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய கரேத் எட்வர்ட்ஸ் இயக்குகிறார். யுனிவர்சல் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ஜோனதன் பெய்லி, ஸ்கார்லெட் ஜொஹான்ஸ்சன், மானுவல் கார்சியா, மஹெர்ஷாலா அலி, லூனா பிளேஸ், டேவிட் ஐகோனோ ஆகியோர் நடிக்கின்றனர்.

சமீபத்தில் இப்படத்தில் டையரா பிரம் டெட்ராய்ட், பிஎம்எப், பிளாக் சம்மர் உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமான பெச்சிர் சில்வைன் இணைந்தார். இந்நிலையில், இப்படத்தின் தலைப்பை படக்குழு அறிவித்துள்ளது. அதனுடன், ஜோனதன் பெய்லி, ஸ்கார்லெட் ஜொஹான்ஸ்சன் மற்றும் மஹெர்ஷாலா அலி ஆகியோர்களின் முதல் தோற்றத்தையும் வெளியிட்டுள்ளது.

'ஜுராசிக் வேர்ல்ட் ரீபெர்த்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் அடுத்த வருடம் ஜூலை 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மேலும் செய்திகள்