50-வது நாளில் அடியெடுத்து வைத்துள்ள 'தி கோட்' படம்
|வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'தி கோட்' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 50-வது நாள் ஆகிறது.
சென்னை,
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய்யின் மிரட்டலான நடிப்பில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போட்டுவரும் படம் 'தி கோட்'. இப்படத்தில் விஜய்யுடன், பிரபு தேவா, பிரசாந்த், மோகன், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் விஜய், அப்பா மற்றும் மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் டீஏஜின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், திரிஷா, சிவகார்த்திகேயன் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்துள்ளனர். இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது. இப்படம் ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான 'தி கோட்' படம் முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.126.32 கோடியை வசூலித்து. இப்படம் தற்போது வரை ரூ.450 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இப்படம் வெளியாகி இன்றுடன் 50-வது நாளை கடந்துள்ளது. அதனை சிறப்பிக்கும் வகையில் படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.