< Back
சினிமா செய்திகள்
இரண்டாவது முறையாக தணிக்கை செய்யப்பட்டகோட் திரைப்படம்
சினிமா செய்திகள்

இரண்டாவது முறையாக தணிக்கை செய்யப்பட்ட'கோட்' திரைப்படம்

தினத்தந்தி
|
27 Aug 2024 9:59 PM IST

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'கோட்' படத்தின் தணிக்கை குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை,

விஜய் நடிப்பில் விரைவில் 'கோட்' படம் வெளியாக இருக்கிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நிலவில் வருகிறது. அடுத்த வாரம் படம் ரிலீஸ் ஆகவிருப்பதால், தற்போது புரமோஷன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் 'கோட்' படம் குறித்து அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள 'கோட்' வரும் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீசாக உள்ளது. இந்நிலையில் அண்மையில் இப்படத்தின் தணிக்கை குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகின. அதன்படி 'கோட்' படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டதாகவும், படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 59 நிமிடங்கள் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது 'கோட்' படம் மீண்டும் தணிக்கை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி 'கோட்' படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் 3 நிமிடங்கள் என்றும், ஏழு இடங்களில் படத்திற்கு சென்சாரில் கட் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இணையத்தில் தீயாய் தகவல்கள் பரவி வருகின்றன.

படத்தின் இறுதியில் படக்குழுவினர் ப்ளூபெர்ஸ் வீடியோ அல்லது படத்தின் இரண்டாம் பாகத்திற்கான தொடக்க காட்சிகளாக இருக்கும் என நெட்டிசன்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்