< Back
சினிமா செய்திகள்
டிஎன்ஏ படத்தின் முதல் பாடல் வெளியானது
சினிமா செய்திகள்

'டிஎன்ஏ' படத்தின் முதல் பாடல் வெளியானது

தினத்தந்தி
|
13 Nov 2024 7:31 PM IST

'டிஎன்ஏ' படத்தின் முதல் பாடலான 'கண்ணே கனவே' வெளியாக உள்ளது.

சென்னை,

"பாணா காத்தாடி, பரதேசி, சண்டிவீரன்" போன்ற படங்களின் மூலம் பிரபலமான நடிகர் அதர்வா, தற்போது 'டிஎன்ஏ' எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அதர்வா இரட்டை வேடங்களில் நடிக்கிறார். நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை நெல்சன் வெங்கடேசன் எழுதி இயக்குகிறார்.

இவர் 'ஒரு நாள் கூத்து', 'மான்ஸ்டர்', 'பர்ஹானா' போன்ற திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து டப்பிங் பணிகளும் நிறைவடைந்தது.

இந்தநிலையில் இந்த படத்தின் முதல் பாடலான 'கண்ணே கனவே' வெளியாக உள்ளது. இதனை இசை புயல் ஏ.ஆர் ரகுமான் அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்