< Back
சினிமா செய்திகள்
The first song from the film Vidaamuyarchi has been released
சினிமா செய்திகள்

வெளியானது 'விடாமுயற்சி' படத்தின் முதல் பாடல்

தினத்தந்தி
|
27 Dec 2024 1:27 PM IST

'சவதீகா' எனப்பெயரிடப்பட்டுள்ள இப்பாடலை அனிருத் மற்றும் அந்தோணிதாசன் பாடியுள்ளனர்.

சென்னை,

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்துள்ளார். மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை அன்று தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 'விடாமுயற்சி' வெளியாகிறது. கடந்த மாதம் 28-ந் தேதி இப்படத்தின் டீசர் வெளியானநிலையில், தற்போது முதல் பாடல் வெளியாகி உள்ளது.

அதன்படி, 'சவதீகா' எனப்பெயரிடப்பட்டுள்ள இப்பாடலை அனிருத் மற்றும் அந்தோணிதாசன் பாடியுள்ளனர். தற்போது வெறும் பாடல் மட்டுமே வெளியாகி உள்ளநிலையில், இன்று மாலை 5.05 மணிக்கு லிரிக் வீடியோ வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்