யோகி பாபு நடித்துள்ள 'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அறிவிப்பு
|யோகி பாபு நடித்துள்ள 'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிளை ஜி.வி.பிரகாஷ் வெளியிட உள்ளார்.
சென்னை,
நடிகர் யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கிய 'கோலமாவு கோகிலா' படத்தில் யோகி பாபுவின் நடிப்பு பட்டிதொட்டி எங்கும் பரவியது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் 'மண்டேலா' படத்தில் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின்னர் 'போட், தி கோட், டீன்ஸ்' போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது விடாமுயற்சி, தி ராஜா சாப், பூமர் அங்கிள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்தநிலையில் யோகிபாபு அடுத்தக்கட்டமாக 'குழந்தைகள் முன்னேற்ற கழகம்' என்ற படத்தில் நடித்துள்ளார். யோகி பாபுவுடன் செந்தில், அகல்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை 'சகுனி' படத்தை இயக்கிய ஷங்கர் தயால் இயக்கி இருக்கிறார்.
இதற்கிடையில் தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கள் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது. இப்படத்தின் இயக்குனர் ஷங்கர் தயால் இது குறித்த பதிவை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பாடலை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட உள்ளார்.