< Back
சினிமா செய்திகள்
பேபி ஜான் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது
சினிமா செய்திகள்

'பேபி ஜான்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது

தினத்தந்தி
|
25 Nov 2024 1:36 PM IST

பாலிவுட் நடிகர் வருண் தவான் நடித்துள்ள 'பேபி ஜான்' படம் வருகிற டிசம்பர் மாதம் 25-ந் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

பிரபல இயக்குனர் அட்லி இயக்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் 'தெறி'. இந்த படத்தில் விஜய்யுடன் சமந்தா, மொட்டை ராஜேந்திரன், ராதிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தநிலையில் இப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இப்படத்திற்கு 'பேபி ஜான்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

தற்போது அட்லி மற்றும் அவரது மனைவி பிரியாவின் ஏ பார் ஆப்பிள் ஸ்டுடியோஸ், ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் முராத் கெதானியின் சினி-1 ஸ்டுடியோஸ் ஆகியவை இணைந்து "பேபி ஜான்" படத்தை தயாரித்துள்ளன. அட்லியின் உதவி இயக்குனர்களில் ஒருவரான காலிஸ் என்பவர் இயக்கி வரும் இந்த படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்கிறார். இந்த படத்தின் நாயகிகளாக கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி ஆகியோர் நடித்து வருகின்றனர். 'மைக்கேல்' படத்தின் ஒளிப்பதிவாளர் கிரண் கவுஷிக் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். தமன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 25 -ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில் இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து பர்ஸ்ட் சிங்கிளின் புரோமோ வீடியோ வெளியானது. இந்த நிலையில் தற்போது 'நைன் மடாக்கா' என்ற பாடல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்