< Back
சினிமா செய்திகள்
கங்குவா படம் குறித்து அமெரிக்காவில் இருந்து வந்த முதல் விமர்சனம்!
சினிமா செய்திகள்

கங்குவா படம் குறித்து அமெரிக்காவில் இருந்து வந்த முதல் விமர்சனம்!

தினத்தந்தி
|
14 Nov 2024 12:59 PM IST

இரண்டு ஆண்டுகள் கழித்து சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக 'கங்குவா' படம் வெளியாகி உள்ளது.

சென்னை,

இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பாபி தியோல் வில்லனாக நடித்திருக்கிறார்.

நடிகர் சூர்யாவின் திரை வாழ்க்கையில், பெரிய படமாக உருவாகியுள்ள இப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து சூர்யா நடிப்பில் ஒரு பிரம்மாண்டமான படம் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் 9 மணிக்கு முதல் காட்சி ஆரம்பித்தாலும், அண்டை மாநிலங்களில் அதிகாலையிலேயே முதல் காட்சி துவங்கிவிட்டது. இதற்கிடையில் சென்னை காசி திரையரங்கிற்கு 'கங்குவா' படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த இயக்குனர் சிறுத்தை சிவா, பத்திரிக்கையாளர்களிடம் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது, "கங்குவா படம் இன்று ரிலீஸ் ஆகியுள்து, ரொம்ப சந்தோஷமாக இருக்கு, அமெரிக்காவில் படம் பார்த்த நண்பர்கள் போன் போட்டு பாராட்டினார்கள். மிகப்பெரிய வெற்றி படம்னு சொல்றாங்க. தமிழ்நாட்டிலும் படத்திற்கு வரவேற்பு கிடைக்கும்னு நம்பிக்கை இருக்கு. ரசிகர்களுடன் படத்தை பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்