< Back
சினிமா செய்திகள்
நடிகர் புகழ் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
சினிமா செய்திகள்

நடிகர் புகழ் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

தினத்தந்தி
|
27 Aug 2024 11:29 AM IST

பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தும் ஷேர் ஆட்டோவை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னை,

விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமானவர் புகழ். இவர் குறிப்பாக 'குக் வித் கோமாளி' 'காமெடி ராஜா கலக்கல் ராணி' உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றார். கடந்த சில ஆண்டுகளாக இவர் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

'அயோத்தி, சபாபதி, வாய்மை, யானை' உள்ளிட்ட படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதன் பின்னர் தற்போது 'மிஸ்டர் ஜு கீப்பர்' என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் விஜய் டிவி புகழ் புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஶ்ரீ லக்ஷ்மி சண்முகநாதம் பிலிம்ஸ் மற்றும் கேசவ் புரொடக்சன்ஸ் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளது. அறிமுக இயக்குனரான மகேஸ்வரன்கேசவன் இயக்கும் இப்படத்திற்கு 'Four சிக்னல்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படமானது, நகரங்களில் வசிக்கும் சாதாரணமான பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தும் எளிய போக்குவரத்தான ஷேர் ஆட்டோவை சுற்றி இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது.

அருவி திருநாவுக்கரசு, கல்லூரி வினோத், லொள்ளு சபா சேஷு, ஷர்மிளா, விஜய் ஆதிராஜ், யூடியூபர் காத்து கருப்பு கலை உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்தநிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போர்ஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்