< Back
சினிமா செய்திகள்
The first look poster of the film RL 25 has been released.
சினிமா செய்திகள்

படத்தின் பெயரை பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியிட்ட ஆர்.எல் 25 படக்குழு

தினத்தந்தி
|
29 Oct 2024 11:16 AM IST

தெலுங்கு இயக்குனர் ரமேஷ் வர்மா இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் தனது 25-வது படத்தில் நடிக்கிறார்.

சென்னை,

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் சென்ற ஆண்டு வெளியான படம் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' . இப்படத்தில் லாரன்ஸுடன் இணைந்து எஸ்.ஜே சூர்யா, நிமிஷா சஜயன் மற்றும் சஞ்சனா நட்ராஜன் நடித்திருந்தனர். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதனைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் 'பென்ஸ்' படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளார். இது லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் 2 -வது படமாகும். அதனையடுத்து வெங்கட் மோகன் இயக்கத்தில் 'ஹண்டர்', அறிமுக இயக்குனரான துரை செந்தில் குமார் இயக்கத்தில் 'அதிகாரம்' போன்ற படங்களில் நடிக்க இருக்கிறார்.

மேலும், 'காஞ்சனா 4' பட பணியிலும் ஈடுபட்டு வருகிறார். இதனைத்தொடர்ந்து, தெலுங்கு இயக்குனர் ரமேஷ் வர்மா இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் தனது 25-வது படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக ஆர்.எல் 25 என பெயரிடப்பட்டுள்ளது.

இன்று நடிகர் ராகவாலாரன்ஸ் தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடும்நிலையில், பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் படத்தின் பெயரை ஆர்.எல் 25 படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு 'கால பைரவா' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்