
நாளை வெளியாகும் சசிகுமார் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக்

ராஜுமுருகன் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாக உள்ளது.
சென்னை,
சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். 'ஈசன்' படத்தை இயக்கிய சசிகுமார் அதன்பின் நடிப்பதில் கவனம் செலுத்தினார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'கருடன், நந்தன்' ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இவர் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் 'டூரிஸ்ட் பேமலி' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார. இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இதற்கிடையில் "ஜோக்கர், குக்கூ, ஜப்பான்" ஆகிய படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சைத்ரா ஆச்சர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் இப்படம் தொடர்பான புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை காலை 11 மணியளவில் வெளியாக உள்ளது. இந்த போஸ்டரை பிரபல பாலிவுட் இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் வெளியிட உள்ளார்.