< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
ஆர்.ஏ.பி.ஓ 22: வெளியானது ராம் பொத்தினேனியின் முதல் தோற்றம்
|7 Dec 2024 2:55 PM IST
ராம் பொத்தினேனியின் 22-வது படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடிக்கிறார்.
ஐதராபாத்,
தெலுங்கு சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் ராம் பொத்தினேனி, வாரியர், ஸ்கந்தா போன்ற படங்களை தொடர்ந்து, 'டபுள் இஸ்மார்ட்' எனும் படத்தில் நடித்திருந்தார். கடந்த 2019ல் வெளியான 'இஸ்மார்ட் சங்கர்' படத்தின் இரண்டாம் பாகமாக வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இப்படத்தைத்தொடர்ந்து, ராம் பொத்தினேனி தனது 22-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக ஆர்.ஏ.பி.ஓ 22 என பெயரிடப்பட்டுள்ளது. மிஸ் ஷெட்டி & மிஸ்டர் பாலிஷெட்டி பட இயக்குனர் மகேஷ் பாபு இயக்கும் இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடிக்கிறார்.
இந்நிலையில், ராம் பொத்தினேனியின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தில் அவர் சாகர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.