< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
மாதவன் நடிக்கும் `அதிர்ஷ்டசாலி' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது
|3 Nov 2024 11:18 AM IST
மாதவனின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை `அதிர்ஷ்டசாலி' படக்குழு வெளியிட்டுள்ளது.
சென்னை,
தற்போது தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் பாலிவுட் சினிமாவிலும் களமிறங்கி கலக்கி வருபவர் நடிகர் மாதவன். இவர் தமிழில் டெஸ்ட் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ள நிலையில் தற்போது அதிர்ஷ்டசாலி எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த படத்தை தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை இயக்கிய மித்ரன் ஆர் ஜவகர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் மாதவனுடன் இணைந்து ராதிகா சரத்குமார், மடோனா செபாஸ்டின், சாய் தன்ஷிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
எஎ மீடியா கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இதற்கு இசை அமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் மாதவன் இரண்டு வகையான தோற்றத்தில் உள்ளார்.