< Back
சினிமா செய்திகள்
அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்தால்தான்...- நடிகர் விதார்த்
சினிமா செய்திகள்

'அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்தால்தான்...'- நடிகர் விதார்த்

தினத்தந்தி
|
17 Jun 2024 9:21 AM IST

ரசிகர்கள் ரசனையை யாராலும் கணிக்க முடியாது என்று நடிகர் விதார்த் கூறினார்.

சென்னை,

நடிகர் விதார்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் அஞ்சாமை. இப்படத்தைத்தொடர்ந்து, சாஜி சலீம் இயக்கி உள்ள 'லாந்தர்' படத்தில் நடிகர் விதார்த் நடித்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் விதார்த் பேசுகையில், "படத்தில் நாயகன் போலீஸ் என்றவுடன் மூன்று மாதம் ஒதுக்குங்கள், உடலை முறுக்கிக் கொண்டு வருகிறேன் என்றேன். அதற்கு இயக்குனர் அந்த கதாபாத்திரம் பொதுமக்களின் பிரதிநிதி. இப்போது இருக்கும் தோற்றத்திலேயே வாருங்கள் என்றார்.

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் இயல்பாக தெரியவேண்டும். நான் அப்படித்தான் நடிக்கிறேன். ரசிகர்கள் ரசனையை யாராலும் கணிக்க முடியாது. அவர்கள் எந்த படங்களை விரும்புவார்கள் என்பதும் யாருக்கும் தெரியாது.

ஒரு படம் ஜெயித்து விட்டால் அதேமாதிரி படங்கள் எடுப்பதும் பின்னர் ஒருவர் வேறு மாதிரி படம் எடுத்தால் அதுமாதிரி எடுப்பதும் இங்கு வழக்கமாக உள்ளது.

நான் எனக்கு பிடித்த கதைகளில் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்கிறேன். இயக்குனருக்கு எல்லோரும் ஒத்துழைப்பு கொடுத்தால்தான் படம் சிறப்பாக வரும்'' என்றார்.

மேலும் செய்திகள்