< Back
சினிமா செய்திகள்
இளையராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்ற லப்பர் பந்து படக்குழு
சினிமா செய்திகள்

இளையராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்ற 'லப்பர் பந்து' படக்குழு

தினத்தந்தி
|
1 Oct 2024 3:43 PM IST

'லப்பர் பந்து' படத்தில் இளையராஜாவின் 'நீ பொட்டு வச்ச தங்க குடம்' பாடல் இடம் பெற்றுள்ளது.

சென்னை,

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'லப்பர் பந்து'. இவர் 'கனா, எப்.ஐ.ஆர்' படங்களில் இணை இயக்குனர் மற்றும் 'நெஞ்சுக்கு நீதி' படத்திற்கு வசனம் எழுதியவர். இந்தப் படத்தில் ஸ்வாசிகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, காளி வெங்கட், பால சரவணன், தேவ தர்ஷிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். கடந்த மாதம் 27-ந் தேதி வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தாண்டின் சிறந்த படங்களில் ஒன்று என ரசிகர்களிடமிருந்து பாராட்டுகளும் கிடைத்துள்ளன. கிரிக்கெட்டை மையமாக வைத்து குடும்ப படமாகவும் இது உருவாகியுள்ளதால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

இந்த படத்தில் இளையராவின் இசையில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான 'பொன்மனச் செல்வன்' படத்தில் இடம் பெற்ற 'நீ பொட்டு வச்ச தங்க குடம்' என்ற பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாடல் கதாநாயகனான அட்டக்கத்தி தினேஷ் விளையாடும் போது இந்த பாடல் ஒலிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த வாரம் லப்பர் பந்து படக்குழுவினர் மறைந்த விஜயகாந்த் குடும்பத்தினரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

அதேபோல இளையராஜாவிடம் உரிய அனுமதி பெற்று பாடலை பயன்படுத்திய படக்குழுவினர் அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர். படத் தயாரிப்பாளர் லட்சுமணன், இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து, அட்டக்கத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்டோர் இளையராஜாவை சந்தித்தனர். இது குறித்த பதிவை படக்குழு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்