19 ஆண்டுகளை நிறைவு செய்த 'ஆறு' திரைப்படம்
|கடந்த 2005-ம் ஆண்டு சூர்யா மற்றும் திரிஷா நடிப்பில் 'ஆறு' திரைப்படம் வெளியானது.
சென்னை,
இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் சூர்யா கூட்டணியில் 'சிங்கம், வேல்' போன்ற படங்கள் உருவாகியுள்ளன. அந்த வகையில் சூர்யா நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான படம் 'ஆறு'. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் வடிவேலு, ஐஸ்வர்யா, தம்பி ராமையா, டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, தாரிகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்த படத்திற்கு ஸ்ரீ தேவி பிரசாத் இசையமைத்துள்ளார். 'மவுனம் பேசியதே' படத்திற்கு பின்னர் சூர்யா மற்றும் திரிஷா இணைந்து நடித்த ஆறு திரைப்படம் ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த படத்திற்கு பின்னர் இவர்கள் இருவரும் இணைந்து, வேற எந்த படத்திலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தது.
இப்படம் மிகவும் அதிரடியான திரைக்கதையுடனும், வேகமாக நகரும் கதைக்களத்துடனும் அமைந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. இந்த நிலையில், இப்படம் வெளியாகி இன்றுடன் 19 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இப்படம் தற்போது வரை சூர்யாவின் கெரியரில் ஒரு சிறந்த படமாக கருதப்படுகிறது.