ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக்கொண்டனர் - ராஷிகன்னா நெகிழ்ச்சி
|ரசிகர்கள் எனக்கு கொடுத்த ஆதரவை மறக்கவே முடியாது என்று நடிகை ராஷிகன்னா கூறினார்.
தமிழில் 'இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், திருச்சிற்றம்பலம், சர்தார், அரண்மனை 4' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ராஷிகன்னா தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
சினிமாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிப்பது குறித்து நெகிழ்ச்சியோடு ராஷிகன்னா கூறும்போது, ''நடிகர்-நடிகைகளுக்கு ரசிகர்களின் ஆதரவு பெரிய சொத்து. அவர்களின் அன்பு எனக்கு முதல் படத்தில் இருந்தே கிடைக்க தொடங்கியது.
நான் நடிக்க ஆரம்பித்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டதை என்னால் நம்ப முடியவில்லை. முதல் தெலுங்கு படத்தில் நடித்தபோது எனக்கு மொழி தெரியாது. ஆனால் ரசிகர்கள் என்னை அவர்கள் வீட்டுப் பெண் மாதிரி ஏற்றுக்கொண்டனர்.
அதன் பிறகு தமிழில் அடி எடுத்து வைத்தேன். அங்கும் ரசிகர்கள் எனக்கு கொடுத்த ஆதரவை மறக்கவே முடியாது. எனது திறமையை நிரூபித்துக்கொள்ள இயக்குனர்கள் வாய்ப்புகளை கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். நான் நடித்த படங்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்ல முடியாது'' என்றார்.