'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு காட்சியை வெளியிட்ட படக்குழு
|நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
சென்னை,
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியானது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து. இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்பட பலர் நடித்தனர். அனிருத் இதற்கு இசையமைத்திருந்தார்.
இந்த படம் விமர்சன ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் அமோக வரவேற்பை பெற்றது. இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்து ரூ. 650 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டியது. சமீபத்தில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனம் மேக்கிங் வீடியோவை மூன்று பாகங்களாக வெளியிட்டது.
இந்தநிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் படப்பிடிப்பு காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ரஜினிகாந்த் மற்றும் விநாயகன் இடையே நடக்கும் பேச்சுவார்த்தை கொண்ட படப்பிடிப்பு வீடியோ காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த காட்சியில் இடம் பெற்றுள்ள 'மனசிலாயோ' வசனம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.