'சூர்யா 45' படத்தின் தொழில்நுட்ப குழுவை அறிவித்த படக்குழு
|ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் ‘சூர்யா 45’ படத்தின் தொழில்நுட்ப குழுவை போஸ்டர் வெளியிட்டு அறிவித்த படக்குழு.
சென்னை,
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக 'சூர்யா 45' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தினை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார்.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்க உள்ளார். 20 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு சூர்யா-திரிஷா இணைந்து நடிக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. இதற்கிடையில், இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் கோவையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் 'சூர்யா 45' படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தனர்.
இதை தொடர்ந்து படத்தின் தொழில்நுட்ப குழுவை போஸ்டர் வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, சண்டை பயிற்சி இயக்குனராக விக்ரம் மோ, கலை இயக்குனராக அருண் வெஞ்சரமூடு மற்றும் படத்தொகுப்பை ஆர். கலைவாணன் ஆகியோர் மேற்கொள்ள உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.