< Back
சினிமா செய்திகள்
கண்டபடி தொட்டு தொல்லை:  ரசிகர்கள் பிடியில் சிக்கித்தவித்த கவர்ச்சி நடிகை
சினிமா செய்திகள்

கண்டபடி தொட்டு தொல்லை: ரசிகர்கள் பிடியில் சிக்கித்தவித்த கவர்ச்சி நடிகை

தினத்தந்தி
|
19 July 2024 5:44 AM IST

மும்பையில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றுவிட்டு வெளியே வந்த கவர்ச்சி நடிகை ஊர்பி ஜாவேத், ரசிகர்களால் மோசமான அனுபவத்தை எதிர்கொண்டுள்ளார்.

மும்பை,

இந்தி கவர்ச்சி நடிகையான ஊர்பி ஜாவேத் அரைகுறை உடையில் எடுத்த தனது ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வலைத்தள பக்கத்தில் தொடர்ந்து வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். குறிப்பாக கயிறுகள், கம்பி, உடைந்த கண்ணாடி, கற்கள், பூ இதழ்கள் போன்றவற்றில் செய்து இவர் அணிந்த ஆடைகள் பிரபலம்.

சில தினங்களுக்கு முன்பு ஓட்டலுக்கு சென்று விட்டு தள்ளாடியபடி வெளியே வந்தார். அவர் மதுபோதையில் இருப்பதாக பலரும் விமர்சித்தனர். இந்த நிலையில் ஊர்பி ஜாவேத், ரசிகர்களால் மோசமான அனுபவத்தை எதிர்கொண்டுள்ளார். மும்பையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு வெளியே வந்தபோது ரசிகர்கள் சூழ்ந்தனர். அவர்களிடம் இருந்து தப்பித்து காரில் ஏறினார்.

ஆனாலும் விடாமல் பின்னால் துரத்தி சென்று கார் முன் இருக்கையில் உட்கார்த்து இருந்த ஊர்பி ஜாவேத்தை காருக்குள் கை நீட்டி கண்டபடி தொட்டு தொல்லை கொடுத்தனர். இதனால் அவர் அதிர்ச்சியானார். பாதுகாவலர்கள் விரைந்து வந்து ரசிகர்களின் கைகளை வெளியே இழுத்து விட்டு ஊர்பி ஜாவேத் காரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இது பரபரப்பானது

மேலும் செய்திகள்