< Back
சினிமா செய்திகள்
நாளை வெளியாகும் பாட்டல் ராதா படத்தின் 3-வது பாடல்
சினிமா செய்திகள்

நாளை வெளியாகும் 'பாட்டல் ராதா' படத்தின் 3-வது பாடல்

தினத்தந்தி
|
2 Dec 2024 6:01 PM IST

குரு சோமசுந்தரம் நடித்துள்ள 'பாட்டல் ராதா' திரைப்படம் வருகிற 20-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சென்னை,

இயக்குனர் பா.ரஞ்சித் நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் 'பாட்டல் ராதா'. இந்த படத்தை தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ளார். ஜோக்கர் படம் மூலம் கவனம் ஈர்த்த குரு சோமசுந்தரம் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு ரூபேஷ் ஷாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு நிரம்பிய எமோஷனல் ரோலர்கோஸ்டராக இந்த படம் இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி வைரலாகின. ஒரு குடிகாரனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் குறித்த கதையில் இப்படம் உருவாகி உள்ளது.

இப்படம் வருகிற 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில் இந்த படத்தின் 2 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. அதனை தொடர்ந்து தற்போது 3-வது பாடலின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, நாளை மாலை 5 மணியளவில் "நானா குடிகாரன்" என்ற பாடல் வெளியாக உள்ளது.

மேலும் செய்திகள்