< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
'எனது அடுத்த படம் அதுதான்' - இயக்குனர் ஷங்கர்
|5 Jan 2025 6:03 AM IST
தனது அடுத்த படம் தொடர்பான அப்டேட்டை இயக்குனர் ஷங்கர் பகிர்ந்துகொண்டார்.
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஷங்கர். இவர் தற்போது ராம் சரண் நடித்துள்ள 'கேம் சேஞ்சர்' படத்தை இயக்கி உள்ளார். இதில், ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்திருக்கிறார். இப்படம் வருகிற 10-ம் தேதி வெளியாக உள்ளநிலையில், தற்போது புரமோஷன் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் ஷங்கர், தனது அடுத்த படம் தொடர்பான அப்டேட்டை பகிர்ந்துகொண்டார்.அப்போது அவர் கூறுகையில்,
'எனது அடுத்த படம் வேள்பாரி. அது எனது கனவு படம். ஊரடங்கு காலத்தில் இதன் ஸ்கிரிப்ட் பணியை முடித்தேன். விரைவில் இதன் படப்பிடிப்பை தொடங்கவுள்ளேன்" என்றார். இதனையடுத்து ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.