'எனக்கு நம்பிக்கை கொடுத்த அஜித் சாருக்கு நன்றி' - இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சிப் பதிவு
|'மார்க் ஆண்டணி' வெளியாகி ஒரு வருடம் நிறைவடைந்ததையடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான 'திரிஷா இல்லனா நயன்தாரா' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்', 'காதலை தேடி நித்யானந்தா, 'வெர்ஜின் மாப்பிள்ளை', 'பஹீரா' உள்ளிட்ட படங்களை இயக்கினார்.
கடந்த ஆண்டு இவர் இயக்கத்தில் வெளிவந்த 'மார்க் ஆண்டணி' மிகப்பெரிய ஹிட் அடித்தது. விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இந்நிலையில், 'மார்க் ஆண்டணி' படம் வெளியாகி ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சிப் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், படக்குழுவுக்கு நன்றி தெரிவித்த ஆதிக் 'எனக்கு நம்பிக்கை கொடுத்த அஜித் சாருக்கு நன்றி' என்றும் கூறியுள்ளார்.
தற்போது, அஜித் நடித்து வரும் 'குட் பேட் அக்லி' படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.