< Back
சினிமா செய்திகள்
தங்கலான் புரோமோஷன்: மாளவிகா மோகனனின் எக்ஸ் தள பதிவு !
சினிமா செய்திகள்

"தங்கலான்" புரோமோஷன்: மாளவிகா மோகனனின் எக்ஸ் தள பதிவு !

தினத்தந்தி
|
26 July 2024 3:28 PM IST

"தங்கலான்" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள மாளவிகா மோகனன், புரோமோஷன் பணியில் பங்கேற்ற புகைப்படங்களை எக்ஸ் தளம் மற்றும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

சென்னை,

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

"தங்கலான்" படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து படத்திற்கான புரோமோஷன் வேலைகள் நடைபெற்றுவருகிறது. இது தொடர்பான புகைப்படத்தை படக்குழுவினர் தங்களின் எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள "தங்கலான்" படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மாளவிகா மோகனன் தன் பங்கிற்கு "தங்கலான்" புரோமோஷன் வேலைகளில் பங்கெடுத்துள்ளார்.

இவர் சிகப்பு நிற புடவையில் இருக்கும் புகைப்படங்களை எக்ஸ் தளம் மற்றும் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் டிரெண்ட் ஆகி வருகிறது.

தனது எக்ஸ் தள பக்கத்தில் சிகப்பு நிற புடவையில் தானிருக்கும் புகைப்படங்களை பகிர்ந்த நடிகை மாளவிகா மோகனன் ஆரம்பமானது "தங்கலான்" புரோமோஷன், ஆரத்தியின் நிறத்திலும் அம்மாவின் நகைகளிலும் "என்ற கேப்சனுடன் புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார்.

விஜய் ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து பிரபலமானவர் மாளவிகா மோகனன் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்