< Back
சினிமா செய்திகள்
image courtecy:instagram@studiogreen_official
சினிமா செய்திகள்

'தங்கலான்' புரொமோஷன் ரத்து - அதற்கு ஆகும் பணத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய படக்குழு

தினத்தந்தி
|
10 Aug 2024 11:51 PM IST

கேரள முதல் -மந்திரியின் பொது நிவாரண நிதிக்கு தங்கலான் படக்குழு நிதி வழங்கியுள்ளது.

சென்னை,

பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தங்கலான்' . இந்த படத்தினை ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். வருகிற 15-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 5-ந் தேதி சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. மேலும் படத்தின் புரொமோசனுக்காக படக்குழு வெவ்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றன. அதன்படி, படத்தின் புரொமோசனுக்காக படக்குழு கேரளா செல்ல இருந்தது. ஆனால், கடும் மழைபொழிவு காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு பல்வேறு பாதிப்புகளை கேரளா சந்தித்துள்ளது.

இதனையடுத்து, கேரளாவில் நடைபெற இருந்த 'தங்கலான்' படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியை படக்குழு ரத்து செய்துள்ளது. மேலும், அதற்கு ஆகும் செலவான ரூ. 5 லட்சத்தை கேரள முதல் மந்திரியின் பொது நிவாரண நிதிக்கு 'தங்கலான்' படக்குழு வழங்கியுள்ளது.

மேலும் செய்திகள்