விஜய்யின் 50-வது பிறந்த நாள்: ரீ-ரிலீசாகும் 6 படங்கள்
|விஜய்யின் பிறந்தநாளான 22-ம் தேதி இவர் நடித்த 6 படங்கள் ரீ-ரிலீசாக உள்ளன
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர், வரும் 22-ம் தேதி தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரது ரசிகர்கள் இப்போதே அதற்கான கொண்டாட்டத்தை தொடங்கிவிட்டனர். சமீபத்தில், விஜய் நடித்த 'கில்லி' ரீ-ரிலீசாகி வசூலை குவித்தது.
இந்நிலையில், இவரது பிறந்தநாளான 22-ம் தேதி விஜய் நடித்த 6 படங்கள் ரீ-ரிலீசாக உள்ளன. அதன்படி, துப்பாக்கி, மாஸ்டர், போக்கிரி, கத்தி, மற்றும் மெர்சல் ஆகிய படங்கள் வெளியாக இருக்கின்றன. கில்லியும் சில திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஒரு நடிகரின் ஆறு படங்கள் மீண்டும் வெளியிடப்படுவது இந்தியாவில் இதுவே முதல் முறையாகும். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
மேலும், விஜய் தற்போது நடித்து வரும் கோட் படத்தில் இரண்டாவது பாடல், விஜய் புதிதாக தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தில் மாநாடு என பல அப்டேட்டுகள் அவரது பிறந்தநாளன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.