'ஜீப்ரா' படத்தின் டீசர் வெளியானது
|'ஜீப்ரா' படம் வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.
சென்னை,
இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் சத்ய தேவ் நடித்துள்ள படம் 'ஜீப்ரா'. இந்தப் படத்தில் தாலி தனஞ்செயா, பிரியா பவானி சங்கர், ஜெனிபர் பிசினாடோ, சுனில், சத்யராஜ், கருடா ராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். ஆக்சன் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படம் பான் இந்தியா படமாக உருவாகி உள்ளது. ஓல்ட் டவுன் பிக்சர்ஸ் மற்றும் பத்மஜா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து தயாரித்துள்ளது.
தமிழிலிருந்து சத்யராஜ், தெலுங்கில் இருந்து சத்யதேவ் மற்றும் கன்னடத்தில் இருந்து தனஞ்சயா ஆகியோரின் முக்கிய நட்சத்திரங்களின் மூன்று வெவ்வேறு கதைகளை பிணைத்து இப்படம் உருவாகி உள்ளது. ஒவ்வொருவரும் அந்தந்த கதைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிறைவடைந்தது. அதையடுத்து படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளது.
இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 31-ந் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்தநிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இதற்கிடையில் நடிகர் நானி தனது எக்ஸ் தளத்தில் 'ஜீப்ரா' படத்தின் டீசரை பகிர்ந்து படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.