< Back
சினிமா செய்திகள்
எலான் மஸ்க் என் எக்ஸ் கணக்கை முடக்கினால் அதுவே முதல் வெற்றி - சிவகார்த்திகேயன் கிண்டல்
சினிமா செய்திகள்

எலான் மஸ்க் என் 'எக்ஸ்' கணக்கை முடக்கினால் அதுவே முதல் வெற்றி - சிவகார்த்திகேயன் கிண்டல்

தினத்தந்தி
|
26 Nov 2024 6:56 PM IST

நடிகர் சிவகார்த்திகேயன், சமூகவலைதளத்தை குறைவாக பயன்படுத்துமாறு கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தற்போது அமரன் பட வெற்றியில் உள்ளார். இப்படம் ரூ. 300 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்நிலையில், நேற்று கோவாவில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன், சமூகவலைதளத்தை குறைவாக பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

'அதிக நேரம் சமூகவலைதளத்தை பயன்படுத்தாதீர்கள். குறிப்பாக எக்ஸ் தளத்தை. இது என் அன்பான ஆலோசனை. இதனால், எலான் மஸ்க் என் கணக்கை முடக்கலாம். அப்படி நடந்தால் அதுவே என் முதல் வெற்றியாக இருக்கும். எக்ஸிலிருந்து வெளியே வந்தால், எந்த பாரமும் இல்லாத சுதந்திரமான மனநிலையை உணர்வீர்கள். கடந்த இரண்டு வருடங்களாக இணையத்திற்கு குறைந்த நேரமே நான் செலவிடுகிறேன். அது உண்மையில் எனக்கு உதவியாக இருந்துள்ளது' என்றார்.

அமரன்' படத்தை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது படத்தில் நடித்து வருகிறார். நடிகை ருக்மணி வசந்த் நாயகியாக நடிக்க, படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். இன்னும் பெயரிடாத இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே தொடங்கி நடைபெற்று வருகிறது.


மேலும் செய்திகள்