நாளை திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் படங்கள்
|நாளை (அக்டோபர் 18) திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் படங்கள் குறித்த ஒரு பார்வை.
சென்னை,
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்தவகையில் நாளை வெளியாகவுள்ள தமிழ் திரைப்படங்கள் குறித்த தகவலை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
1. சார் : அறிமுக இயக்குனர் போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சார்'. சாயா கண்ணன் கதாநாயகியாக நடித்துள்ளார். கல்வியின் மகத்துவம் , கல்வியின் தேவையை பற்றி கூறும் படமாக உருவாகி உள்ளது. இப்படத்தை எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம் நிறுவனம் வெளியிடுகிறது.
2. ராக்கெட் டிரைவர் : ஸ்டோரீஸ் பை தி ஷோர் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அனிருத் வல்லப் தயாரித்துள்ள புதிய படம் "ராக்கெட் டிரைவர்". பேண்டசி, டிராமா-காமெடி என்டர்டெயினர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் நடிகை சுனைனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
3. ஆலன் : இயக்குனர் சிவா.ஆர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'ஆலன்'. இந்த படத்தில் வெற்றி கதாநாயகனாகவும், நாயகிகளாக ஜெர்மன் மதுரா மற்றும் அனு சித்தாராவும் நடித்திருக்கிறார்கள். ஒரு எழுத்தாளனின் வாழ்க்கை தேடல் மற்றும் ஒரு அழுத்தமான காதல் களத்தில் இப்படம் உருவாகி உள்ளது.
4. ஆர்யமாலா : தெருக்கூத்துக் கலையை மையப்படுத்திய காதல் கதையை கொண்ட இந்தப் படம் 1980-களின் பின்னணியில் உருவாகியுள்ளது. இப்படத்தை வடலூர் சுதா ராஜலட்சுமி மற்றும் ஜேம்ஸ் யுவன் தயாரித்துள்ளனர். 'பீச்சாங்கை' படத்தில் நடித்த ஆர்.எஸ்.கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ளார்.
5. கருப்பு பெட்டி : ஜேகே பிலிம் புரொடக்சன்ஸ் சார்பில் கே.பிரபாத் தயாரித்து நடிக்கும் படம், 'கருப்பு பெட்டி'. தேவிகா வேணு நாயகியாக நடித்துள்ளார். குடும்பஸ்தனான நாயகனுக்கு ஏற்படும் ஒரு சாதாரணப் பிரச்சினை அவரது குடும்பத்துக்குள் என்ன மாதிரியான விளைவுகளைக் கொண்டு வருகிறது என்பதுதான் இப்படம்.